May 06, 2026 /

ஒரே நாள் இரவில் ஒரு ஊரே அழிந்த வரலாறு தெரியுமா??? 

மக்கள் வாழ தகுதியற்ற நகரம்ன்னு 1964ல தனுஷ்கோடியை அரசாங்கம் அறிவிக்குறாங்க.  22.12.1964 இரவு தூங்க போன மக்களுக்கு தெரியாது மறுநாள் காலையில் தனுஷ்கோடியே சின்னாபின்னமா மாறப்போகுதுன்னு. இரவு முழுக்க வீசிய புயலும் கனமழையாலும் தனுஷ்கோடி ஊருக்குள்ள கடல் தண்ணீர் புகுந்தது. பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்தது. வங்காள விரிகுடா கடல் பொங்கி 22 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியது.

தனுஷ்கோடியை புயல் தாக்குனப்ப 250 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இருட்டும் மழையும் கடல் நீரும் தனுஷ்கோடியை சூழ்ந்து இருந்தது. மறுநாள் காலையில்  மழை நின்றாலும் பொங்கி வந்த கடல் தண்ணீர் வடிய வில்லை.  தனுஷ்கோடி முழுக்க இறந்தவர்கள் உடல் மிதந்தது. இந்த புயல்ல மட்டும் தனுஷ்கோடியில் 2000 பேர் இறந்தாங்க. இலங்கையில உள்ள தலைமன்னாரில் 1500 பேர் இறந்தாங்க, இந்த புயல்ல பாம்பன் ரயில் பாலமும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தனித்து விடப்பட்ட தனித்தீவு மாறிடுச்சு ராமேஸ்வரமும் தனுஷ்கோடியும்,  தனுஷ்கோடின்னு ஒரு நகரமே தண்ணீரில் மூழ்கி அழிஞ்சு போச்சு அடையாளம் தெரியாத உடல்களை 28.12.1964ல்  பெரிய குழி தோண்டி புதைச்சாங்க. ஐநா தனுஷ்கோடியை  மக்கள் வாழ தகுதியற்ற நகரம்ன்னு அறிவித்தது. தனுஷ்கோடியை பற்றி உங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் சொல்லுங்க 

Recent News

Sponsored

About Us

We are passionate about bringing you fascinating stories and insights through our dedicated YouTube channel. From uncovering the richness of ancient Tamil traditions to sharing updates on technology, travel, and more, Tamil Paadhai serves as a bridge between the past, present, and future.

Subscribe Our Channel

© 2025 | TAMIL PAADHAI | All Rights Reserved

Designed & developed by Nisquare Tech