22.12.1964 இரவு 11:55 தனுஷ்கோடி முழுக்க பரவலா மழை பெஞ்சுட்டு இருக்குது அந்த சமயம் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் எண் 653, 115 பயணிகளோடு தனுஷ்கோடி நோக்கி பயணம் செய்தது. 1964ல் ஏற்பட்ட புயல் மெல்ல மெல்ல நகர்ந்து 250 கிலோமீட்டர் வேகத்துல தனுஷ்கோடியை தாக்குது. 23.12.1964 இரவு 12.10லிருந்து தனுஷ்கோடிக்கு உள்ள போக ரயில் எண் 653க்கு சிக்னல் கிடைக்கல ரயில் நிறுத்தப்படுது.

புயலோட வேகம் அதிகமாகி, வெளியே என்ன நடக்குதுன்னு புரியாம பயந்து போன பயணிகள் ரயில் கதவுகளையும் ஜன்னலையும் சாத்துறாங்க இரவு ஒரு மணி புயல் வேகத்தில் வங்கக்கடல் கொந்தளிக்க ஆரம்பிக்குது 22 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியது.

ஒரு பக்கம் புயலும், மறுபக்கம் அலைகளும் சேர்ந்து ரயில் எண் 653 புரட்டி தூக்கி வீசுது அதுல பயணம் செய்த 115 பயணிகளும் இறந்துட்டாங்க. 1964 புயலுக்கு அப்புறம் தனுஷ்கோடிக்கு ரயில் சேவையும் நிறுத்த பட்டது


